தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆடி 18: ஊரடங்கை மீறினால்… எச்சரித்த மாவட்ட ஆட்சியர்

கரூர்: ஆடி 18 ஆன்று ஊரடங்கை மீறி காவிரி ஆற்றில் மக்கள் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் எச்சரித்துள்ளார்.

aadi18 celebration karur District Collector warns curfew violations
aadi18 celebration karur District Collector warns curfew violations

By

Published : Aug 1, 2020, 12:27 PM IST

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் கோயில்கள் மற்றும் முக்கிய புண்ணிய தலங்கள் உள்ளன . இந்தப் பகுதிகளில், ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் தேதியன்று கரூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் பொதுமக்கள், குறிப்பாக பெண்கள்,புதுமணத்தம்பதிகள் கூடி ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடுவர்.

தற்போது கரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வருகிறது. ஒரு இடத்தில் அதிகளவில் மக்கள் கூடுவதால் நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் இருப்பதால் , பொதுமக்கள் நலன் கருதி ஆடி 18ஆம் ( 02.08.2020 ) தேதி, கரூரில் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் பொதுமக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி யாரேனும் மேற்கண்ட பகுதிகளுக்கு வந்தால் அவர்கள் மீதும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்தும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ABOUT THE AUTHOR

...view details