திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கரூர் மாவட்ட திமுக சார்பில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, தனது சொந்த நிதியிலிருந்து மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பட்டினியில் இருந்து மீட்கும் வகையில், ரூபாய் 550 மதிப்புள்ள 5 கிலோ அரிசி மூட்டை, துவரம் பருப்பு 1 கிலோ, புளி ¼ கிலோ, சமையல் எண்ணெய் ½ லிட்டர், உப்பு 1 கிலோ, மிளகு 50 கிராம், சீரகம் 100 கிராம், கடுகு 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், சாம்பார் தூள் 100 கிராம், வர மிளகாய் 150 கிராம், பூண்டு ¼ கிலோ ஆகிய 12 வகையான மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
ஊரடங்கு: சொந்த பணத்தில் உதவி வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் - சொந்த பணத்தில் நலத்திட்ட உதவி
கரூர்: அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, தனது சொந்த செலவில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய செந்தில் பாலாஜி
இதேபோல் கரானோ நோய்த் தாக்குதலால் தனிமைப்படுத்தப்பட்ட பள்ளபட்டி பேரூராட்சிக்குச் சென்ற செந்தில் பாலாஜி, அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சிறுபான்மையின சமுதாய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.