கரூர் மாவட்டத்தில் 3 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டம் - karur latest news
கரூர்: காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலமைமையில், கரூர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று (வியாழக்கிழை) நடைபெற்றது.
கரூர் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி, குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினர் ராமர் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும், அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்துகொண்டு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள், மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து ஆலோசித்தனர். இதில் ஆளும் கட்சியைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளவில்லை.