தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை! - கரூர் மாவட்ட குற்றச் செய்திகள்

கரூர்: புலியூர் அருகே பிரசவத்திற்காக தாய் வீட்டிற்குச் சென்ற மனைவி, கணவருடன் சேர்ந்து வாழ மறுத்த விரக்தியில் இளைஞர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.

கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை
கணவருடன் சேர்ந்து வாழ விரும்பாத மனைவி: விரக்தியில் கணவர் தற்கொலை

By

Published : Apr 22, 2021, 1:13 AM IST

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள புலியூர் பகுதியில் வசித்து வருபவர் டெய்லர் கார்த்திகேயன் (32). கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி பிரசவம் பார்ப்பதற்காக தாய் வீட்டுக்குச் சென்றவர் பிரசவ காலம் முடிவடைந்த பின்னும் கணவர் வீட்டுக்கு திரும்பவில்லை.

இதனால், கடந்த சில நாள்களாக விரக்தியிலிருந்த கார்த்திகேயன் ஏப்ரல் 20ஆம் தேதி இரவு கரூர்-திருச்சி ரயில் பாதை உள்ள புலியூர் புரவிபாளையம் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பிரசவத்திற்குப் பிறகு மனைவி, தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் விரக்தியில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையும் படிங்க: இளைஞரின் கடைசி நிமிடங்கள் - திக் திக் சிசிடிவி பதிவு!

ABOUT THE AUTHOR

...view details