தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் அருகே 8 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்: 3 பேர் கைது - illicit arrack

கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்று, அதற்காக ஊறல் தயார் செய்திருந்த மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

சாராயம்
சாராயம்

By

Published : May 27, 2021, 7:58 PM IST

கரூர்:கிருஷ்ணராயபுரம் தாலுகா, மாயனூர் அருகே கட்டளைநத்தமேடு ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருவதாக கரூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல் துறையினர், நேற்று (மே.26) கட்டளைநத்தமேடு ஆற்றங்கரையோரப் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அந்தச் சோதனையில், அதே பகுதியைச் சேர்ந்த மனோஜ் (35), புஷ்பராஜ் (30), அரவிந்த் (30), ஆகிய மூன்று பேர் அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 90 லிட்டர் சாராய ஊறல் உருவாக்கியிருந்தது கண்டறியப்பட்டது. மேலும், அவர்களிடமிருந்த 8 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, மூவரும் கைது செய்யப்பட்டனர்.

சட்டவிரோதமாக மது மற்றும் கள்ளச்சாராயம் ஆகியவற்றை விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர்சசாங் சாய் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:இனி தாய்மொழியில் பொறியியல் படிக்கலாம்!

ABOUT THE AUTHOR

...view details