கரூர் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்கூர் பகுதியில் குடிமராமத்து பணிகள் மூலம் குளங்கள் தூர்வாரப்பட்டுவருகின்றன. அதன் ஒருபகுதியாக இன்று தமிழ்நாடு போக்குவரத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் சென்று பார்வையிட்டார். இதில், கரூர் மாவட்ட திட்ட அலுவலர் கவிதா, அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
'திமுகவில் 70 வயதானாலும் இளைஞர் அணியில் இருக்கலாம்' - அமைச்சர் சாடல் - ADMK Vs DMK
கரூர்: திமுகவில் 70 வயது ஆனாலும் இளைஞர் அணியில் இருக்கலாம், ஆனால் தங்களுடைய இயக்கத்தில் அப்படி இருக்க முடியாது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், திமுக எம்எல்ஏ அன்பில் மகேஷ் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர், 434 குளங்களுக்கு அனுமதி பெற்று நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், இதில் 75 விழுக்காடு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். திமுகவினர் முன்அனுமதி பெறாமல் குளத்தை தூர்வாருவதாகக் கூறிவிட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது தேவையில்லாதது என்றார்.
திமுக இளைஞர் அணியில் சேர்வதற்கு அக்கட்சி எம்எல்ஏ அன்பில் மகேஷ் தனக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறிய அமைச்சர், அவர்களது இளைஞர் அணியில் சேர்வதற்கு தனக்கு வயதில்லை என்றும் திமுகவில் 70 வயது ஆனாலும் இளைஞர் அணியில் இருக்கலாம், ஆனால் தங்களுடைய இயக்கத்தில் அப்படி இருக்கும் முடியாது என்று சாடினார்.