கரூர் மாவட்டம், செங்குந்தபுரம் பகுதியில் உள்ள காமராஜபுரம் அருகில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கரோனா - Corona in Karur District
கரூர்: செங்குந்தபுரம் பகுதியில் உள்ள காமராஜபுரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மருத்துவர் உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு வயது குழந்தை, 28 வயது பெண், 28 வயது ஆண், 55 வயது ஆண், 47 வயது பெண் என மொத்தம் ஆறு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும், கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண், அதே பகுதியைச் சேர்ந்த 42 வயது ஆண், கரூரைச் சேர்ந்த 44 வயது ஆண் ஆகியோரையும் சேர்த்து இன்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 165ஆக உயர்ந்துள்ளது.