கரூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வைர பெருமாளின் நினைவாக 50ஆவது ஆண்டு நினைவு பொன்விழா புறாப் போட்டி கரூரில் இன்று தொடங்கியது. இதில், சாதாரண புறா மற்றும் கர்ணப் புறா என்று இருவகையான புறாக்கள் போட்டியில் பங்கேற்றன. இந்த போட்டிகள் கரூர் மாவட்டத்திலுள்ள திருவள்ளுவர் மைதானத்தில் இன்று காலை தொடங்கியது.
"கரூரில் 50ஆவது ஆண்டு புறா பந்தயம்" - 50வது ஆண்டுப் புறா பந்தயம்
கரூர்: கரூர் மாவட்டத்தில் 50ஆவது ஆணடு புறா பந்தயம் இன்று தொடங்கியது.
இதுகுறித்து பேசிய கரூர் நகர மன்ற அதிமுக செயலாளர் நெடுஞ்செழியன், "ஆறு மணி நேரம் தொடர்ந்து புறாக்கள் பறக்க வேண்டும். அதிக நேரம் பறக்கும் புறாக்கள் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். புறா போட்டியானது வருகின்ற 21ஆம் தேதி வரையும், கர்ணப் புறாக்களுக்கு ஆகஸ்டு மாதம் போட்டிகள் நடைபெறும். போட்டியில் முதல் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 7,000 ரூபாய் மூன்றாம் பரிசாக 5 ஆயிரம் ரூபாயும் நான்காம் பரிசாக 3000 ரூபாயும் வழங்கப்படும் என்றார்.
மேலும் இந்த புறாக்களை தொடர்ந்து கண்காணிப்பதற்கு நடுவர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதில் வெற்றி பெறும் புறாவின் உரிமையாளர்களுக்கு, தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் பரிசுகளை வழங்குவார்கள் என்று தெரிவித்தார்.