கரூர் மாவட்டம் பாலவிடுதி காவல் எல்லையில் காவல்துறையினர் நேற்று (மே.25) வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குளக்காரன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன்(37), என்பவர் திருச்சியிலிருந்து கள்ளச்சாராயம் வாங்கி வந்தபோது பிடிபட்டார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேதபோல கரூர் பசுபதிபாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியே சென்ற பர்ஜ்வானா, ரிஸ்வானா பேகம் ஆகிய இரு பெண்களின், இருசக்கர வாகனத்தில் தடைசெய்யப்பட்ட 30 லிட்டர் கள் இருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
இதற்கிடையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 மதுபாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தடைசெய்யப்பட்ட 5 லிட்டர் கள்ளச்சாராயம், 30 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக 137 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 139 நபர்கள் கைது செய்யப்படுள்ளனர். அவர்களிடமிருந்து 6 ஆயிரத்து 728 மதுபாட்டில்கள், 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கரூரில் 5 லிட்டர் கள்ளச்சாராயம், 30லிட்டர் கள் பறிமுதல்! - கள்ளச்சாராயம் பறிமுதல்
கரூர்: ஊரடங்கு காரணமாக மாவட்டத்தில் 12 இடங்களில் காவல்துறையினர் சோதனை சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரூரில் 5லிட்டர் கள்ளச்சாராயம், 30லிட்டர் கள் பறிமுதல்!
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்