கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட குட்கா, விற்பனை செய்யப்பட்டு வருவதாக கரூர் நகர்ப் பகுதியிலுள்ள வணிக வளாகங்களில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலர் கலைவாணி, மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் பாஸ்கர், கரூர் நகர காவல் துணைக் கண்காணிப்பாளர் தேவராஜன் தலைமையிலான பறக்கும் படையினர் நேற்று (ஜூலை 27) சோதனை மேற்கொண்டனர்.
உணவு பாதுகாப்புத் துறையினர் கடையில் ஐந்து கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனர் கரூர் பேருந்து நிலையம், முருகநாதபுரம் பகுதியிலுள்ள வணிக நிறுவனங்கள், தேநீர் கடைகள் போன்ற இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர்.
5 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல்
சோதனையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக், புகையிலைப் பொருள்கள் ஆகியவை ஐந்து கிலோ கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியதுடன் மீண்டும் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
கரூர் பேருந்து நிலையத்திலுள்ள கடையில் 5 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் மேலும், கரூர் நகர்ப் பகுதியில் தொடர்ந்து சோதனை நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: '100 கோடி ரூபாய் மோசடி வழக்கு - சிபிஐ அதிரடி சோதனை!'