கரூரில் உள்ள வெண்ணைய்மலை முருகன் கோயிலில் ஆண்டுதோறும் திருப்புகழ் படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று 45ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை நடைபெற்றது. பசுபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பிருந்து முருகனின் வேல் அலங்காரம் செய்யப்பட்டு, மேள தாளங்களுடன் வெண்ணைய்மலை முருகன் கோயிலுக்கு கிரிவலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
வெண்ணைய்மலை முருகன் கோயிலில் 45ஆம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை! - கரூர் மாவட்டச் செய்திகள்
கரூர்: வெண்ணைய்மலை முருகன் கோயிலில் நாற்பத்து ஐந்தாம் ஆண்டு திருப்புகழ் படி பூஜை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
karur
இதில் பக்தர்கள் காவடிகள், பால்குடம், தீர்த்தக்குடம் ஏந்தி சென்றனர். கிரிவலம் கோயிலை அடைந்ததும், திருப்புகழ் படி பூஜை நடைபெற்றது. இதையடுத்து முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் நடைபெற்று பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: சொக்கப்பனை தீ - பழனியில் பக்தர்கள் சாமி தரிசனம்!