தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி - கரூரில் 36 பேர் தேர்வு - 36 womens selected for kabadi competition

கரூர்: மாநில அளவிலான நடைபெறும் பெண்கள் கபடி போட்டிக்காக, தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடந்த தேர்வில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

kabadi
கபடி

By

Published : Feb 17, 2021, 6:25 AM IST

கரூர் மாவட்ட பெண்கள் கபடி அணி தேர்வு, தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில், உடற்கல்வி துறை சார்பில் இன்று (பிப்.16) நடைபெற்றது. இதில், 250க்கும் மேற்பட்ட கபடி வீராங்கனைகள் கலந்துகொண்டனர். வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாடவுள்ளனர்.

பெண்கள் கபடி போட்டியில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என 3 பிரிவுகளுக்கு தலா 12 என மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இக்குழுவில் தேர்வானவர்கள மாநில அளவில் நடைபெறும் பெண்கள் கபடி போட்டியில் விளையாட தகுதிப்பெற்றுள்ளனர்.

இதையும் படிங்க:ஓசூர் அடுத்த அத்திமுகம் கிராமத்தில் வெறிநாய் கடித்ததில் 10 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details