தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கதண்டு வண்டு கடித்து 32 பேர் மருத்துவமனையில் அனுமதி - கரூர் அண்மைச் செய்திகள்

குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்துவதற்கு கூடியிருந்தவர்களை விரட்டி, கடித்த விஷ கதண்டு வண்டால் மிகவும் ஆபத்தான நிலையில், 32 பேர் குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கதண்டு வண்டு கடித்து 32 பேர் மருத்துவமனையில் அனுமதி
கதண்டு வண்டு கடித்து 32 பேர் மருத்துவமனையில் அனுமதி

By

Published : Aug 22, 2021, 3:25 PM IST

கரூர்: மணப்பாறை அருகே உள்ள அழகப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துசாமி, செல்வராசு. இருவரும் சகோதரர்கள் ஆவர்.

இவர்களின் குலதெய்வமான அரவாண்டி அம்மனின் கோயில், கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த பொய்யாமணி பகுதியில் அமைந்துள்ளது.

விஷேசத்தில் நடந்த தகராறு

இந்நிலையில் தங்களின் இரு குழந்தைகளுக்கும், காதணி விழா நடத்த சகோதரர்கள் இருவரும் ஏற்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து காதணி விழாவுக்கு இரு குடும்பத்தார், உறவினர்கள் உள்ளிட்டப் பலர் வந்திருந்தனர். அப்போது திடீரென கோயில் பகுதியில் குவிந்த கதம்ப வண்டுகள், நிகழ்ச்சிக்கு வந்திருந்த நபர்கள் மீது பரவி கடிக்கத் தொடங்கியது.

இதனால் பலரும் அலறியடித்து ஓடியுள்ளனர். இதில் குழந்தைகள் உள்பட படுகாயமடைந்த 32 பேர், குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுகுறித்து குளித்தலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:குழந்தை இல்லாத மருமகளிடம் அத்துமீறிய மாமனார்... உணவில் எலி பேஸ்ட் வைத்துக் கொன்ற மருமகள்

ABOUT THE AUTHOR

...view details