தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 வயது ஆண் புள்ளிமான் உயிரிழப்பு! - Karur vennai Malai

கரூர்: காட்டுப் பகுதியில் மூன்று வயதான ஆண் புள்ளிமான் ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கிடந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

3 வயது ஆண் புள்ளிமான் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை.
3 வயது ஆண் புள்ளிமான் உயிரிழப்பு - வனத்துறையினர் விசாரணை.

By

Published : Jul 28, 2020, 2:39 PM IST

கரூர் வெண்ணைமலை பசுபதிபாளையம் அருகே சிறிய காட்டுப்பகுதி உள்ளது. இப்பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புள்ளிமான் உயிரிழந்த நிலையில் கிடந்தது.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானின் உடலை கைப்பற்றி, மானின் உயிரிழப்புக்கு காரணம் என்ன? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவேளை, திருச்சி மாவட்டத்தில் உள்ள பச்சைமலை பகுதியிலிருந்து இந்த மான் வந்திருக்க கூடும் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details