தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் தீ விபத்து: 3 பள்ளி சிற்றுந்துகள் எரிந்து நாசம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

கரூர்: திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பள்ளி சிற்றுந்துகள் எரிந்து நாசமாகின.

தீ விபத்தில் 3 பள்ளி மினி பேருந்துகள் எரிந்து சேதம்
தீ விபத்தில் 3 பள்ளி மினி பேருந்துகள் எரிந்து சேதம்

By

Published : Mar 4, 2021, 9:29 PM IST

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே அன்னை இந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்குச் சொந்தமான மூன்று சிற்றுந்துகள் பள்ளி வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டிருந்தன.

திடீரென அந்தச் சிற்றுந்துகள் தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் முசிறி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தீ விபத்தில் 3 பள்ளி சிற்றுந்துகள் எரிந்து நாசம்

தீயணைப்பு வாகனம் வர தாமதமானதால் 3 மினி பேருந்துகளும் தீயில் எரிந்து சேதமாகின. சிற்றுந்துகள் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரை பொதுமக்கள் சாதுரியமாக நகர்த்தியதால் சேதாரம் ஏற்படவில்லை.

முசிறியிலிருந்து தீயணைப்பு வாகனம் லாலாப்பேட்டைக்கு வர காலதாமதம் ஆவதால், குளித்தலையில் தீயணைப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.

மேலும் இந்தத் தீ விபத்து குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல் அருகே தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details