தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருதூர் அருகே பறக்கும்படையினர் சோதனை- 2,57,000 ரூபாய் பறிமுதல்

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் மருதூர் அருகே பறக்கும்படையினர் சோதனையில் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவரை துரத்தி பிடித்து 2,57,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டனர்.

2,57,000 ரூபாய் பறிமுதல்
2,57,000 ரூபாய் பறிமுதல்

By

Published : Mar 11, 2021, 6:08 PM IST

Updated : Mar 11, 2021, 8:38 PM IST

குளித்தலை மருதூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரூரில் இருந்து அந்த வழியாக வந்த வாகனம் (TN 18 AL1958) நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும் படையினர், வாகனத்தை விரடடிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் 2 லட்சத்து 57 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், குளித்தலை தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை, 7,78,800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தொகையை உரிய ஆவணங்கள் அளித்து பெற்றுக்கொள்ள வசதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தலைமையில் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனையும் படிங்க: சௌதி இளவரசருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை

Last Updated : Mar 11, 2021, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details