கரூர் ஆபீசர்ஸ் கிளப்பில் கரூர் மாவட்ட இறகுப்பந்து கழகம், தமிழ்நாடு இறகுப்பந்து கழகம் இணைந்து நடத்தும் 22ஆவது மாநில அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் இறகுப்பந்தாட்டம் இன்று தொடங்கியது. இந்தப் போட்டி இன்று முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, கரூர், சேலம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சுமார் 624 வீரர்கள் வீராங்கனைகள் ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.