கரூர்:மண்மங்கலம் அருகே உள்ள மேற்குகூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(58). இவர், கரூர் வட்டார வளர்ச்சி கல்வி அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவுன்(50) தளவாபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு விக்னேஷ் கண்ணன்(26) என்ற மகனும், ஜீவிதா(25) என்ற மகளும் உள்ளனர்.
நேற்று(ஆகஸ்ட் 1) காலை லோகநாதன் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், லோகநாதனின் மனைவி தனது மகன், மகனை அழைத்துக் கொண்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், கரூர் சென்றுவிட்டு வீடு திரும்பிய லோகநாதன் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.