நாளை தேர்தல் பரப்புரை நிறைவடைய உள்ள சூழ்நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கரூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் பறக்கும்படை குழுவினர் ஈடுபட்டுவருகின்றனர்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வைரமடை சோதனைச்சாவடி அருகே நிலையான கண்காணிப்புக் குழு அலுவலர் முருகன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அரவக்குறிச்சி அருகே ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் - அரவக்குறிச்சி அருகே ரூபாய் 1,18,200 பறிமுதல்
கரூர்: அரவக்குறிச்சி அருகே காரில் ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1,18,200 பணத்தை கைப்பற்றி தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாய் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தொகை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 200 ரூபாயை அரவக்குறிச்சி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அரவக்குறிச்சி சார்நிலைக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிப்பதைத் தீவிரப்படுத்துங்கள்!'