கரூரில் பொங்கல் விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட விரோதம் காரணமாக கடந்த 18ஆம் தேதி சின்னஆண்டான் கோவிலைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (27) என்பவரை, பிரேம் (எ) பிரேம்குமார் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பட்டப்பகலில் இளநீர் கடையில் வைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடினார். இதுதொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
கரூர் இளநீர் கடை கொலை வழக்கில் 11 பேர் கைது! - karur cocount selling shop murder case
கரூர்: பட்டபகலில் இளநீர் கடையில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய 11 நபர்களை தனிப்படை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 11 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கிடைத்த தகவலின்படி, பிரேம்குமார்(28), கோகுலகிருஷ்ணன்(21), பாண்டித்துரை (22), ஆர்எஸ் மணி (21), தமிழரசன் (25) அஜித் (23) கலைச்செல்வன் (19 ), அரவிந்த் (27), கேசவன் (21), ரமேஷ் (38), விமல் பஷீர் (22) ஆகிய 11 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், முக்கிய குற்றவாளியான பிரேம்குமார், மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கு SC, ST சட்டப் பிரிவுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஎஸ்பி முகேஷ் ஜெயக்குமார் கூறியுள்ளார்.