கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியை அடுத்த குமாரண்டவலசு பகுதியில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் ஒன்று நோயாளியுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸின் முன்புறத்தில் உள்ள பேட்டரியில் திடீரென தீ பிடித்துள்ளது.
இதைக்கண்ட ஓட்டுநர் ஆம்புலன்ஸை பாதியிலேயே நிறுத்தி பின் அதிலிருந்த நோயாளியை இறக்கியுள்ளார். சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
எனினும் தீ ஆம்புலன்ஸ் முழுவதிலும் பரவியதையடுத்து ஆம்புலன்ஸ் முற்றிலும் எரிந்து நாசமானது. ஆம்புலன்ஸ் ஒட்டுநர் உரிய நேரத்தில் அதிலிருந்த நோயாளியை வெளியேற்றியதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
சாலையில் கொளுந்துவிட்டு எரிந்த 108 ஆம்புலன்ஸ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீலகிரி மாவட்டம் குன்னூரில் நோயாளியுடன் சென்ற ஆம்புலன்ஸ் பாதிவாழியில் பழுதடைந்தது. இதுபோன்று உயிர்காக்கும் வாகனங்களை முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருவதால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுத்துவதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.