கரூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்ன நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிறைவுற்ற சில நிமிடத்தில் அமைச்சர் மாவட்ட ஆட்சியர் அறைக்கு சென்றார்.
அப்பொழுது அங்கு பணியில் இருந்த நிருபர்கள், பொதுமக்கள் அங்கிருந்த விஐபி மின் தூக்கி (lift) மூலம் இரண்டாவது தளத்திலிருந்து முதல் தளத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென மின்தூக்கி நின்றது. மின் தூக்கியின் அவசர சாவி இருந்தும் திறக்க முடியாமல் மின் தூக்கியை உடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே மின்தூக்கிக்குள் சிக்கிய 10 பேரில் மூதாட்டி ஒருவர் திடீரென மயக்கம் அடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீசன் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டுக்குள் சிக்கிய பத்து பேர் அரை மணி நேர போராட்டத்துக்குப் பிறகு 10 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் மயக்கமான நிலையில் இருந்த மூதாட்டி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறை வீரர்களுக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் பாராட்டு தெரிவித்தார். இச்சம்பவத்தால் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தகராறு செய்த இளைஞரை அடித்துக் கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை- கரூர் நீதிமன்றம் தீர்ப்பு!!