கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பத்ரி நாராயணன் பொறுப்பேற்ற பின்பு, தனிப்படை காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஏராளமானோரை கைது செய்தனர்.
மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், நாகர்கோவில் கோட்டார் அருகே சரக்கல்விளை பகுதியைச் சேர்ந்த உதேஷ்ராஜ் (23) என்ற இளைஞர் கஞ்சா விற்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.