தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணமாகாத விரக்தியில் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை! - young person hanging dead

கன்னியாகுமரி: திருமணமாகாத விரக்தியில் கட்டிட தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

By

Published : Jan 23, 2020, 3:14 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி செட்டிச்சார்விளை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (39). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். நாகர்கோவில் பகுதியில் கட்டிட வேலை நடந்து வந்ததால் நாகர்கோவில் அடுத்த ராமன்புதூர் பகுதியில் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக அவர் வேலைக்குச் செல்லவில்லை. இதனால், அவர் உடன் வேலை பார்க்கும் சிலர் இன்று அவரைப் பார்த்து பேசுவதற்காக வந்துள்ளனர். அவர்கள் அறையின் கதவினை வெகுநேரம் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதற்கிடையில் சதீஷ் தங்கியிருந்த அறையில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சதீஷ் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

இதனையடுத்து, காவல் துறையினர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்விற்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சதீஷ் தனக்கு திருமணம் ஆகாத விரக்தியில் இருந்து வந்தததாகவும், அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: கத்தி முனையில் காதலன் முன்பாக பெண் கூட்டு பாலியல் வல்லுறவு

ABOUT THE AUTHOR

...view details