கன்னியாகுமரி: அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச்சேர்ந்தவர், ஸ்ரீராஜ். தனது தாயின் உதவியோடு சிறுவயதைக் கடந்து வந்த ஸ்ரீராஜின் வறுமையான வாழ்க்கைப்பயணம் சாதனைகளைப்பெறுவதில் பல தடைகளை உருவாக்கியது. ஓவியக்கலையில் தனக்குக்கிடைத்த திறமையைப் பல ஆண்டுகளாகப் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திவருகிறார், ஸ்ரீராஜ். ஓவியக்கலையை பாடமாகப் பயிற்சி பெறாத இவரது வண்ண ஓவியங்களும், பென்சில் படங்களும் உயிரோட்டத்துடன் காட்சி தருகிறது.
கின்னஸ் சாதனைப் படைக்க வேண்டும் என்பதே ஸ்ரீராஜின் கனவாகவே இருந்தது. பத்து ஆண்டுகளில் கின்னஸ் சாதனைக்காக உருவாக்கிய படைப்புகள் இவருக்கு பல்வேறு விருதுகளை பெற்றுக்கொடுத்தது. கலைப்பயணத்தில் தமிழ்நாடு அரசின் வளர்மணி விருதையும் ஸ்ரீராஜ் பெற்றார்.
2013இல் இருந்து கின்னஸ் சாதனைக்காகப் பல்வேறு படைப்புகளை உருவாக்கினார். ஆனால், தற்போது 3,57,216 தீக்குச்சிகளைக் கொண்டு 2.2 சதுர மீட்டர் பரப்பில் ஸ்ரீராஜ் உருவாக்கிய சார்லி சாப்ளினின் உருவம், அவருக்கு கின்னஸ் விருதை பெற்றுக்கொடுத்து உள்ளது.
தீக்குச்சியால் சார்லி சாப்ளின் உருவத்தை உருவாக்கி இளைஞர் கின்னஸ் சாதனை வறுமை மாறாத வாழ்கைப் பயணம் தொடரும்போதும், இன்னும் பல சாதனைகளைப் படைக்க ஆர்வத்தோடு முயற்சித்து வருகிறார், ஸ்ரீராஜ். அரசு தரப்பில் உதவி செய்ய முன்வந்தால் சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு சாதனைகள் பல புரிந்து, இந்தியாவிற்கு பெருமை சேர்க்க இளைஞர் ஸ்ரீராஜ் தயாராக இருப்பதாக தன் கனவை வெளிப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று திடீர் டெல்லி பயணம்!