கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கையை பாதுகாத்து பசுமை மாவட்டமாக மாற்ற இளைஞர்கள் ஒன்று திரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் 'இயற்கையுடன் ஒரு பயணம்' என்ற அமைப்பை தொடங்கினர்.
இயற்கையோடு இணைந்து வாழ வழிவகுக்கும் குமரி இளைஞர் பட்டாளம்! - குமரி இயற்கையுடன் ஒரு பயணம் அமைப்பு
கன்னியாகுமரி: பொது இடங்களில் மரத்தை நட்டுப் பாதுகாத்து வரும் , இளைஞர்களுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த அமைப்பின் மூலம் பொதுஇடங்கள், காவல் நிலைய வளாகம், நீதிமன்ற வளாகம், சாலையோரம் உள்ளிட்ட பகுதிகளில் மரம் நட்டு வளர்த்து வருகின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் குளங்கள் தூர்வாருதல், கால்வாய்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த மூன்றாண்டுகளில் இந்த இயற்கையுடன் ஒரு பயணம் அமைப்பினர் 1,500-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு வளர்த்து வருகின்றனர். குமரி இளைஞர்களின் இந்தச்செயலை வரவேற்கும் விதமாக, பொதுமக்கள் இளைஞர்கள் வைத்துள்ள மரங்களுக்கு தண்ணீர் விட்டு வளர்த்து ஆதரவளித்து வருகின்றனர். குமரியை பசுமை மாவட்டமாக மாற்றும் இளைஞர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.