குமரி மாவட்டம், தெங்கம்புதூரை அடுத்துள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராமச்சந்திர பிரபு (வயது 31). இவர் நேற்று (செப்.26) மாலை தனது வீட்டைச் சுற்றியுள்ள மணணால் ஆன மதில் சுவர் அருகே நின்று, ஜல்லியை மண்வெட்டியால் அள்ளி கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென மண் சுவர் இடிந்து அவர் மேல் சரிந்து விழுந்துள்ளது. பின்னர் இடிபாடுகளில் சிக்கியிருந்த இளைஞரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.