தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமி பாலியல் வன்புணர்வு: போக்சோவில் இளைஞர் கைது - kanyakumari district news

கன்னியாகுமரி: பேஸ்புக் மூலம் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.

போக்சோவில் இளைஞர் கைது
போக்சோவில் இளைஞர் கைது

By

Published : Dec 3, 2020, 5:08 PM IST

கரோனா தொற்றால் பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக பூட்டப்பட்டுள்ளன. இதனால் மாணவ, மாணவிகள் ஆன்லைன் வகுப்பு மூலம் கல்வி பயின்று வருகின்றனர். சிலர் அதை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி (15) பேஸ்புக்கில் மூழ்கினார். இதனால் சிறுமிக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சீரஞ்சீவி (27) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பேஸ்புக்கில் அதிக நேரம் பேசி நண்பர்கள் ஆகினர்.

பின்னர் இளைஞர் சிறுமியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். இதை நம்பி சிறுமி இளைஞர் வீசிய காதல் வலையில் சிக்கினார்.

தொடர்ந்து சிறுமியை சந்திக்க இளைஞர் கன்னியாகுமரிக்கு வந்தார். அவர் நினைத்ததைபோல் சிறுமியை தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்தார்.

இதனிடையே சிறுமி காணாமல் போனதாக அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதனடிப்படையில் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்தனர். மேலும் அவருடன் இருந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வேண்டும்!

ABOUT THE AUTHOR

...view details