கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரம் அருகே கோட்டவிளையைச் சேர்ந்த மரிய செல்வன் என்பவரது மகன் அஜய் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்துள்ளார்.
இதனால் அப்பெண் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று, இவர் தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், மகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவெடுத்துள்ளனர். இதனையறிந்த அந்த இளைஞர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து திருமணத்தைத் தடுத்துள்ளார். பின்னர் தொடர்ந்து அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.