கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே விதவைப் பெண் ஒருவர் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆபாச படங்களை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் இவருக்கு வேறொரு அலைபேசி எண்ணிலிருந்தும் தொடர்ந்து பாலியல் தொல்லை (Sexual harassment) அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணனை சந்தித்து புகாரளித்துள்ளார்.
அவரது உத்தரவின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் ரீத்தாபுரம் ஈத்தம்பாட்டைச் சேர்ந்த சதீஷ்(27), இரு வேறு அலைபேசி எண்கள் மூலம், ஆபாச காணொலிகளை அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.