தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களிடம் கஞ்சா விற்பனைசெய்த இளைஞர் கைது - மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது

கன்னியாகுமரி: சுற்றுலாப் பயணிகள், மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த வள்ளியூரைச் சேர்ந்த தனுஷ்கோடி என்பவர் கைதுசெய்யப்பட்டார்.

kanja theft
kanja theftkanja theft

By

Published : Feb 28, 2020, 7:30 PM IST

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் பள்ளிக் கல்லூரி, கடற்கரைப் பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடப்பதாகக் காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், நெல்லையிலிருந்து அரசுப் பேருந்தில் கன்னியாகுமரிக்கு கஞ்சா கடத்திவருவதாகக் கன்னியாகுமரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் அன்பரசு லீபுரம் சந்திப்பில் சோதனையில் ஈடுபட்டுவந்தார். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்திலிருந்த ஒரு நபர் சந்தேகத்துடன்கூடிய பையுடன் கீழே இறங்கினார். இதில் சந்தேகமடைந்த உதவி ஆய்வாளர் அன்பரசு, அந்த நபரை அழைத்து அவரிடமிருந்த பையை வாங்கி சோதனையிட்டார். அதில், ஒரு கிலோ 150 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து அந்த நபரை கன்னியாகுமரி காவல் நிலையம் கொண்டுவந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் நெல்லை மாவட்டம் வடக்கு வள்ளியூர் மறவர் காலனியைச் சேர்ந்த வேலாண்டி மகன் தனுஷ்கோடி (32) என்பது தெரியவந்தது. அவர், கன்னியாகுமரி பகுதியில் பள்ளி கல்லூரி, சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து கஞ்சா விற்றுவருவதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

கஞ்சா கடத்தியவர் கைது

இதனைத்தொடர்ந்து, அவரிடமிருந்த 1.150 கிலோ கஞ்சாவை பறிமுதல்செய்து தனுஷ்கோடி மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கடைசிவரை குடிசையிலேயே இருந்த 'எளிமை எம்எல்ஏ'! - காமராசராகவே வாழ்ந்த காத்தவராயன்!

ABOUT THE AUTHOR

...view details