தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குமரியில் மேலும் ஒரு காதல் க்ரைம்: அச்சத்தில் தவிக்கும் பெற்றோர் - காதலியை ஏமாற்றி பணம் பறித்த இளைஞர்

கன்னியாகுமரி: இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்வதாகக் கூறி புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த இளைஞரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

lover
lover

By

Published : Jun 3, 2020, 3:23 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே ஒசரவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஆரோன்ராஜ். இவரது மகள் சர்மிளா (25). இவர் குமரியில் இளங்கலை செவிலியர் படிப்பு (B.Sc Nursing) பயின்று, தற்போது குவைத்தில் பணிபுரிந்துவருகிறார்.

குமரியில் இருந்த காலத்தில் ஃபேஸ்புக் மூலமாக, காட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்த மர்பின் தனேஷ் என்ற இளைஞருடன் அறிமுகமாகி இருவரும் காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது.

இருவரும் பல இடங்களுக்குச் சென்று நெருக்கமாக இருந்து வந்துள்ளார்கள். இதனை ரகசியமாக புகைப்படம், காணொலி எடுத்துவைத்துள்ள மர்பின் தினேஷ் காதலி சர்மிளாவிடம், அவரது ஆபாச புகைப்படங்களையும், காணொலிகளையும் காண்பித்து லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார்.

இதுவும் போதாதென்று மேலும் ஐந்து லட்ச ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன் இருக்கும் நெருக்கமான உல்லாசப் படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து வெளிநாட்டில் இருக்கும் பெண்ணின் தாயார் மர்பின் தனேஷ் மீது புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் குமரி மாவட்ட காவல் துறையினர் மர்பின் தனேஷை பிடித்து ரகசிய விசாரனை நடத்திவருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் இளம்பெண்களை ஏமாற்றி ஆபாச புகைப்படங்கள் எடுத்து பணம் பறித்த காசி வழக்கு சூடுபிடித்துவரும் நிலையில், இதுபோல் மற்றொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:13 ஆண்டுகளுக்கு பிறகு தமிழாய்வு நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் நியமனம்!

ABOUT THE AUTHOR

...view details