கேரள மாநிலம் கந்தாலூர், அரிமாலூர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அஜ்மல் கான் (23). இவர் கடந்த 24ஆம் தேதி கேரள மாநிலம் நறுவமூடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கஞ்சா புகைத்துள்ளார்
போதையில் இருந்த அவர்கள் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கார்த்திக் என்ற இளைஞரை தடுத்து நிறுத்தி அவரது கழுத்தில் இருந்த ஒன்றரை சவரன் நகையை பறித்துக் கொண்டதுடன் அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு நண்பர்கள் மூன்று பேரும் தப்பி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அஜ்மல்கான் தான் கொள்ளையடித்த நகை, இருசக்கர வாகனத்துடன் குமரி மாவட்டம் நாகர்கோவில் வந்தார். அங்கு தனது பள்ளி தோழனான விஷ்ணு பிரசாத் என்பவரை சந்தித்து குமரி மாவட்டத்திற்கு வேலைதேடி வந்ததாக கூறி அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 26ஆம் தேதி இரவு அவர் திருடி வந்த இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தபோது ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரை சோதனையிட்டபோது அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் இருந்துள்ளது.
இதனால் மேலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரை கோட்டார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்தார். தொடர்ந்து கேரள மாநிலத்தில் இவர் வசித்துவந்த பகுதியில் உள்ள இரண்டு காவல் நிலையங்களில் விசாரித்துள்ளனர் அவர் மீது எந்த வழக்கும் இல்லாததால் அவரை காவல்துறையினர் விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.
கேரளாவில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குமரியில் கைது!
நாகர்கோவில்: கேரளாவில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை குமரி காவல்துறையினர் பிடித்து கேரள மாநில காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கேரளாவில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் குமரியில் கைது
எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் நறுவமூடு காவல் நிலையத்தில் விசாரித்த போது அஜ்மல்கான் மீது கொலை முயற்சி வழக்கு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கேரள காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி நேற்று இரவு குமரி வந்த கேரள காவல்துறையினர், தமிழ்நாட்டு காவல்துறையினர் பிடியில் இருந்த அஜ்மல் கானை கேரளா அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க:சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த அதிமுக பிரமுகர் கைது!