தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இடிபாடுகளில் சிக்கிய இளைஞர் மீட்பு! - இளைஞர் மீட்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கான்கிரீட் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவரின் கை சிக்கியதால் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயணைப்புப் படையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இளைஞர் மீட்பு
இளைஞர் மீட்பு

By

Published : Oct 7, 2020, 8:14 PM IST

Updated : Oct 7, 2020, 8:21 PM IST

கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கட்டுமான இடிபாடுகளில் சிக்கிய இளைஞரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பிலிருந்து சவேரியார் கோயில் செல்லும் முக்கிய சாலையை விரிவுபடுத்தும் பணியை மாநகராட்சிமேற்கொண்டு வருகிறது. இதற்காக கட்டடங்கள் மாற்றியமைக்கும் பொருட்டு அவற்றை அகற்றும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இளைஞர் மீட்பு

இந்நிலையில், இன்று(அக்.7) மாலை சவேரியார் கோயில் சாலையில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டடத்தை மாற்றி அமைக்கும் பணியில் பல தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென கான்கிரீட் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் சுங்கான்கடை சேர்ந்த மணிகண்டன்(23) என்ற தொழிலாளியின் கை அதில் சிக்கிக்கொண்டது.

இதனையடுத்துதகவல் தீயணைப்புத் துறைக்கு அளிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர், ஏணி மேல் ஏறி நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் அந்த தொழிலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் உடல் மீட்பு!

Last Updated : Oct 7, 2020, 8:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details