கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்தவர் வினோத் டி.ஜான். இவர் இன்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். மாவட்ட ஆட்சியரை சந்திப்பதற்காக சென்ற நிலையில் அவரின் உதவியாளர்கள், நீங்கள் முகக்கவசம் அணியவில்லை. அதனால் முகக்கவசம் அணிந்துவிட்டு வாருங்கள் என்று கூறி அனுப்பியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து வினோத்தும் முகக்கவசம் வாங்கிக்கொண்டு மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்திக்க சென்றார். அப்போது மாவட்ட ஆட்சியர் அவரை சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் வேதனையடைந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.