கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வெட்டூர்ணிமடம் பள்ளிவிளை பகுதியைச் சேர்ந்தவர் சுமித் பிபின் பாலன் (35). இவர் வெட்டுர்ணிமடம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் தனது ஹோட்டலுக்கு தேவையான பொருள்களை வாங்க இருசக்கர வாகனத்தில் கடைக்குச் சென்றார்.
பொருள்களை வாங்கிவிட்டு கடைக்கு திரும்பும்போது அவ்வழியாக வந்த மினி பஸ் எதிர்பாராதவிதமாக சுமித்தின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இதனால் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த சுமித், சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.