தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கன்னியாகுமரியில் கரை ஒதுங்கிய இளைஞர் உடல்! - கன்னியாகுமரியில் கரை ஒதுங்கிய இளைஞர் சடலம்

கன்னியாகுமரி: பூம்புகார் சுற்றுலாப் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் அகமதாபாத்தைச் சேர்ந்த இளைஞரின் உடல் கரை ஒதுங்கியுள்ளதால் காவல் துறையினர் இது குறித்து விசாரனை நடத்திவருகின்றனர்.

கரை ஒதுங்கிய இளைஞரின் சடலம்

By

Published : Nov 13, 2019, 11:58 AM IST

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு உள்நாடு, வெளிநாடுகளிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கன்னியாகுமரி பூம்புகார் சுற்றுலாப் படகு போக்குவரத்து படகுகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் பகுதியில் ஒரு இளைஞரின் உடல் மிதப்பதாக கன்னியாகுமரி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், இறந்த நிலையில் கடலில் மிதந்துகொண்டிருந்த இளைஞரின் உடலை மீட்டனர். சடலத்தை சோதனை செய்தபோது அவருடைய பர்ஸில் ரூபாய் ஆயிரத்து 600 ரொக்க பணமும் அடையாள அட்டையும் இருந்துள்ளது.

கரை ஒதுங்கிய இளைஞரின் சடலம்

அதில் அந்த இளைஞர் அகமதாபாத் மணிநகரைச் சேர்ந்த லஷ்மன்பாய் என்பவரது மகன் விஜய்பாய் ராவல் (24) என்பது தெரியவந்தது. பின்பு, அவரது உடல் உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

மேலும், அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் செல்லும்போது தவறி விழுந்தாரா என்பது குறித்து கன்னியாகுமரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : காவலர் பணிக்கான தகுதி தேர்வில் பரிதாபம்- மூர்ச்சையாகி இளைஞர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details