கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகேவுள்ள வில்லவிளையைச் சேர்ந்தவர் பொன்னையா. இவரது மகன் அபிஷேக் (19). இவர், இன்று அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் ஆரல்வாய்மொழியில் இருந்து தோவாளை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
பெருமாள்புரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த தேங்காய் பாரம் ஏற்றி வந்த டெம்போ ஒன்று எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.