கன்னியாகுமரி மாவட்டம் குளப்புறம் பகுதியைச் சேர்ந்தவர் அபினந்த் (22). இவர் அவரது வீட்டின் அருகிலுள்ள 21 வயது இளம்பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது, வீட்டின் பின்புறம் சென்று தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இளைஞர் கைது! - பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இளைஞர்
கன்னியாகுமரி: குளப்புறம் அருகே இளம்பெண்ணை குளியலறையில் வைத்து வீடியோ எடுத்த இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
![இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இளைஞர் கைது! இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்த இளைஞர் கைது!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-04:50:18:1604056818-tn-knk-05-women-harassment-youth-arrested-image-7203868-30102020164240-3010f-1604056360-1042.jpg)
Young man arrested in sexual harassment
இதனைத் தட்டி கேட்ட அப்பெண்ணின் தாயாரை அபினந்த் தகாதவார்த்தையால் பேசி தாக்கியுள்ளார். இது குறித்து அப்பெண்ணின் தாயார் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அபினந்தை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.