கன்னியாகுமரி நாகர்கோவில் அருகேயுள்ள தட்டான்விளை பகுதியைச் சேர்ந்தவர் சுயம்புலிங்கம் (52). இவரது மகள் விஜி (19). இவரை நேற்று முன்தினம் (செப்.16) முதல் காணவில்லை. இதைத்தொடர்ந்து அவரது பெற்றோர்கள், உறவினர்களின் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களில் தேடி அலைந்தும் மகள் கிடைக்கவில்லை.
இதனால் சுயம்புலிங்கம் ஈத்தாமொழி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதில் அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் அஜய் கண்ணன் (19) தனது மகள் விஜியை கடத்திச்சென்றதாக புகார் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரைத் தொடர்ந்து ஈத்தாமொழி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன விஜியையும், அவரை கடத்திச்சென்றதாகக் கூறப்படும் அஜய் கண்ணனையும் தேடிவருகின்றனர்.
குமரியில் இளம்பெண் கடத்தல்: இளைஞர் மீது புகார்! - நாகர்கோவில் அருகே இளம்பெண் கடத்தல்
கன்னியாகுமரி: குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 19 வயது இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவர் மீது பெண்ணின் தந்தை ஈத்தாமொழி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
missing
Last Updated : Sep 18, 2020, 2:54 PM IST