குமரி மாவட்டம், சின்னத்துறை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ். மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவி கீதா, உணவகத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில், இரண்டாவது மகள் அனுதாஸ்(19) மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ., படித்து வந்தார்.
கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் தீவிர விசாரணை! - கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரி: கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வழக்கம் போல், நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த அனு தாஸ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்த கீதா, மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து தகவலறிந்த நித்திரவிளை காவல் துறையினர், அனுதாஸின் சடலத்தை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அனு தாஸ் காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து நித்திரவிளை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.