குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனை, நான்கு தனியார் மருத்துமனைகள் ஆகிய இடங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர மூன்று கோவிட் பராமரிப்பு மையங்களிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் குறிப்பாக, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உடலில் ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.