அத்திவரதர் என்ற பெயரை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில்இருக்க முடியாது. காரணம் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளின் வைபவம் வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும். இந்த நிகழ்வானது சமீபத்தில்தான் நடைபெற்று முடிந்தது. இதனைக் கோடிக்கணக்கான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.
இதனிடையே, அத்திவரதர் சுவாமியை தினமும் மக்கள் தரிசனம் செய்யும் வகையில் சென்னையில் உள்ள ஒரு ஆசிரமம் ஒன்றில் அத்திவரதர் சுவாமியை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தனர். அதன்படி, குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இறச்சகுளம் பகுதியில் அத்தி மரத்தால் சுவாமி சிலை வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றன.
அத்திவரதர் மரச்சிலையை உருவாக்கும் பணியில் சிற்ப கலைஞர்கள் ஆறு பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர். சிலை வடிவமைப்பு பணிகள் முடிவடைந்து சிறப்பு பூஜைகள் செய்து சென்னைக்கு சுவாமி சிலையை சிற்ப கலைஞர்கள் கொண்டுச் சென்றனர்.
எட்டரை அடி உயரத்தில் அத்திமரத்தால் செய்யப்பட்ட அத்திவரதர். இது குறித்து சிலை வடிவமைபாளர் சந்திர பிரகாஸ் கூறுகையில், "முழுக்க முழுக்க அத்தி மரத்தில் உருவாக்க பட்ட இந்த அத்திவரதர் சுவாமி சிலை எட்டரை அடி உயரம் கொண்டது. இந்தச் சிலையைக் கொண்டு செல்லும் வழியில் காஞ்சிபுரம் வராதராஜா பெருமாள் கோயிலில் வைத்து பூஜைகள் செய்தபின் சென்னைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்” என்றார்.
இதையும் படிக்க: கிறிஸ்துமஸ் கேக் - பழக்கலவை விழா!