தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடனுதவி!

கன்னியாகுமரி :வடக்குதாமரைகுளத்தில் மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு ரூபாய் 30 லட்சத்தை கடனுதவியாக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் வழங்கினார்.

மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடனுதவி
மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கு கடனுதவி

By

Published : Nov 1, 2020, 1:26 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் வடக்குதாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வடக்குதாமரைகுளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க மகாசபை கூட்டத்திற்கு பார்த்தசாரதி தலைமை வகித்தார். மேலும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 30 லட்சத்தை கடனுதவியாக வழங்கினார்.


நிகழ்ச்சியில் ஆவின் சேர்மன் அசோகன், மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், ஒன்றிய கவுன்சிலர் சண்முகவடிவு, குலசேகரபுரம் ஊராட்சி தலைவர் சுடலையாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:ரயில் பயணங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய 'மேரி சாஹெலி' முயற்சி தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details