தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'எங்கும் பெண்களுக்குச் சம உரிமை கிடைப்பதில்லை' - இஸ்ரோ அறிவியல் அறிஞர் வேதனை - இஸ்ரோ விஞ்ஞானி ஜெசி ப்ளோரா

கன்னியாகுமரி: உலகில் எங்கும் பெண்களுக்குச் சம உரிமை முழுமையாகக் கிடைப்பதில்லை என்றும், பெண்கள் தங்களைத் தாங்களே ஊக்கப்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் இஸ்ரோ அறிவியல் அறிஞர் ஜெசி ப்ளோரா கூறியுள்ளார்.

இஸ்ரோ விஞ்ஞானி ஜெசி ப்ளோரா
இஸ்ரோ விஞ்ஞானி ஜெசி ப்ளோரா

By

Published : Mar 9, 2020, 10:45 AM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் மன்றம் அமைப்பு சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்கள் மன்றத்தின் நிறுவனரும், பயோனியர் குமாரசாமி கல்லூரி பேராசிரியருமான சுபத்ரா தலைமை தாங்கினார். இதில், இஸ்ரோ அறிவியல் அறிஞர் ஜெசி ப்ளோரா உள்ளிட்ட ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெசி ப்ளோரா, "உலகில் எங்கும் பெண்களுக்குச் சம உரிமை முழுமையாகக் கிடைப்பதில்லை. பெண்களே தங்களைத் தானே ஊக்கப்படுத்தி முன்னேற வேண்டும்.

உலகில் சிறந்த பெண் சாதனையாளர்கள் உள்ளனர். பெண்கள் குடும்பத்திற்காகத் தங்களைத் தியாகம் செய்துவிடுகின்றனர். அவர்கள் தங்களையும் உயர்த்த முன்வர வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பு மிக முக்கியம். பெண் பாதுகாப்பு குறித்து அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்வது எப்படி என அறிந்து வைத்திருக்க வேண்டும்" எனக் கூறினார்.

பெண்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கத்தில் பங்கேற்ற இஸ்ரோ அறிவியல் அறிஞர்

இதையும் பார்க்க: சிங்கப் பெண்களுடன் மோடி கலந்துரையாடல்

ABOUT THE AUTHOR

...view details