தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் - அதிமுக பிரமுகர் மீது புகார்

கன்னியாகுமரி: பெற்றோரை பிரிந்து வசிக்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிமுக பிரமுகர் மீது மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

By

Published : Sep 23, 2020, 8:32 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், "நான் மார்த்தாண்டம் விரிகோடு என்னும் இடத்தில் வசித்து வந்தேன். என்னை பாலியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் எங்கள் வீட்டில் துன்பப்படுத்தியதால் எனது தோழி ஒருவரின் உதவியுடன் நாகர்கோவிலில் தற்போது வசித்து வருகிறேன்.

என்னை காணவில்லை என்று எனது தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நான் காவல்துறையினரிடம் நேரடியாக சென்று எனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினேன். ஆனால் காவல்துறையினர் அதை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் இந்தப் பிரச்சினைக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லாத உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் தற்போது என்னை செல்போனில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்து வருகிறார். அவருடன் தவறாக நடந்து கொள்ளும்படி என்னை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்.

மேலும் என்னுடன் நீ இருக்காவிட்டால் கன்யாகுமரி மாவட்டத்திலேயே இருக்க முடியாது எனக்கு போலீசார் அனைவரையும் தெரியும் என தொடர்ந்து மிரட்டி வருகிறார். என் பெண்மையை இழிவுபடுத்தி தற்கொலைக்கு தூண்டும் வகையில் நடந்து கொள்ளும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details