தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதி பலி!

கன்னியாகுமரி: நாகர்கோவில் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது ரயில் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

கோப்புப்படம்: தண்வாளம்

By

Published : May 4, 2019, 8:43 PM IST

நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே, இன்று காலை, அப்பகுதி மக்கள் நடந்து சென்றபோது தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் ஒரு பெண் சடலமாக கிடப்பதைப் பார்ந்து அதிர்ந்துபோயினர்.

இதுகுறித்து அவர்கள் நாகர்கோவில் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதில், தண்டவாளத்தில் சடலமாக கிடந்த உடல் நாகர்கோவில் அடுத்த அருகுவிளையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான பார்வதி (46) என்பதும், அவர் இன்று பணிக்கு செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, ரயில் மோதி சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பிரிதாபமாக உயிரிழந்தார் என்பதும் தெரியவந்தது.

உடற்கூறாய்வுக்காக பார்வதியின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ள காவல் துறையினர், தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details