கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மைலாம்பாறை மேட்டில் உள்ள தனியார் பள்ளி பின்புறம் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியோவுல் ஹக் தலைமையிலான காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.