தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

ஆடி மாதம் தொடங்கியதை முன்னிட்டு காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், காற்றாலைகளில் மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. ஆனால் உற்பத்தி செய்து கொடுத்த மின்சாரத்திற்கு பணம் தருவதில் இழுபறி நிலை நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பு.. காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு இழுபறி?
காற்றின் வேகம் அதிகரிப்பு.. காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு இழுபறி?

By

Published : Jul 18, 2022, 4:07 PM IST

கன்னியாகுமரி: காற்று அதிகமாக வீசும் இடங்களில் உலகிலேயே முதல் இடத்தில் கலிபோர்னியாவும், இரண்டாவது இடத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியும் இருந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி, முப்பந்தல், செண்பகராமன் புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 10,000 க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

ஆண்டுதோறும் ஆடி மாதம் தொடங்கியதுமே உச்ச கால காற்றின் சீசன் அதிகரிக்கும். குறிப்பாக மே மாதம் 15 ஆம் தேதிக்கு மேல் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை உச்ச கால காற்றின் சீசன் அதிகரிப்பு காலங்களாகும். அந்த வகையில், ‘ஆடி காற்றில் அம்மியும் நகரும்’ என்ற அளவில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. - 25 மீட்டர்/ வினாடி என்ற அளவில் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

காற்றின் வேகம் அதிகரிப்பு.. காற்றாலை மின் உற்பத்தியும் அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு இழுபறி?

இதனால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி பல மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக 250 கிலோ வாட், 500 கிலோ வாட் முதல் 2000 மெகா வாட் வரை மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகள் இயங்கி வருவதாக காற்றாலை பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ‘காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து அரசுக்கு மின்சாரத்தை கொடுத்தாலும், அரசிடம் போதுமான கட்டுமான வசதிகள் இல்லை.

உற்பத்தி செய்து கொடுத்த மின்சாரத்திற்கு பணம் தருவதிலும் இழுபறி நிலை நீடிப்பது, தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது’ என காற்றாலை மின் பொறியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:'குப்பைகளை வைத்து மின்சாரம் தயாரிப்போம்..!' - அமைச்சர் கே.என்.நேரு

ABOUT THE AUTHOR

...view details