தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு: நாளை தீர்ப்பு

கன்னியாகுமரி: காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் நாளை மாலை 3 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

Wilson's murder case judgement
Wilson's murder case judgement

By

Published : Jan 20, 2020, 4:19 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கடந்த 8ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம்(25), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை சேர்ந்த தவ்பீக்(27) ஆகியோர் கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும் குமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது உபா சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இருவரையும் இன்று குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருந்தனர். ஆனால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு திடீரென அவர்களை நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்யப்பட்டது.

வில்சன் கொலை குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஆஜர்

இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் பலத்த பாதுகாப்புடன் இருவரையும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன் குற்றவாளிகள் இருவருக்கும் நீதிமன்ற காவல் தொடர்கிறது என அறிவித்ததுடன், நாளை மாலை 3 மணிக்கு இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details